மக்கள் கம்யூனிஸ எதிர்ப்பு கழகம்
People's Anti Communism League
இந்திய மக்களுக்கும் உலக மக்களுக்கும் எண்ணற்ற துயரை கொண்டுவந்த இந்த கம்யூனிஸ சிந்தனை, "மக்கள் போராட்டம்", "தொழிலாளர்கள் உரிமை", "எதேச்சதிகார எதிர்ப்பு", "பாஸிஸ எதிர்ப்பு", "புதிய ஜனநாயகம்" போன்ற வார்த்தை ஜாலங்களால் மக்களிடம் ஆதரவு தேட முயல்கிறது.
இதுவரை நடந்த வரலாற்றை எடுத்து பார்க்கும்போது,
மக்கள் போராட்டம் என்ற பெயரில் மக்களை போராட வைத்து இறுதியில் மக்களை அடிப்படை தேவைகளுக்கே போராட வைத்துவிட்டதை பார்க்கிறோம்.
தொழிலாளர்கள் உரிமை என்று தொழிலாளர்கள் மத்தியில் ஆதரவு தேடி ஆட்சிக்கு வந்த பின்னால், தொழிலாளர்களுக்கு முதலீட்டிய அமைப்பில் இருந்த ஒரு சில உரிமைகள் கூட பறிக்கப்பட்டு அடிமைகள் போல ஆக்கப்பட்டதை வரலாறு சொல்கிறது.
பாஸிஸ எதிர்ப்பு என்ற பெயரில் மக்களிடம் வார்த்தை ஜாலம் காட்டி மக்களை தங்கள் பின்னால் வரவழைத்த பின்னால், தங்கள் எதிர்ப்பு கருத்துக்களை "மக்கள்" பெயரிலேயே கடுமையாக ஒடுக்கி பாஸிஸ அமைப்பையே இவர்கள் உருவாக்கினர், அதன் பெயரிலேயே எண்ணற்ற கொலைகளை செய்தனர் என்பதையும் பார்க்கிறோம்.
எதேச்சதிகார எதிர்ப்பு, ஏகாதிபத்திய எதிர்ப்பு என்று பேசுபவர்கள் ஆட்சிக்கு வந்தபின்னால், மற்ற நாடுகளை எவ்வளவு கீழ்த்தரமாகவும் சுரண்டல் முறையிலும் அடிமைகள் போல நடத்தினர் என்பதனை சோவியத் யூனியன் யுக்ரேன் மற்றும் இதர இனத்தவரை நடத்தியதையும் சீன கம்யூனிஸ்டுகள் திபெத் கம்போடியா வியத்நாம் ஆகிய நாடுகளை நடத்தியதையும், நடத்துவதையும் இன்றும் தனது விஷக்கரங்களை மற்ற நாடுகள் மீது வீசுவதையும் பார்க்கிறோம்.
இன்றும் தமிழ்நாட்டில் புதிய ஜனநாயகம் என்று ஆளை ஏமாற்றும் முயற்சிகள் நடந்துவருகின்றன. எந்த கம்யூனிஸ, சோசலிஸ நாட்டில் ஜனநாயகம் இருந்திருக்கிறது? புதிய ஜனநாயகம் என்பது ஜார்ஜ் ஆர்வெல் சொல்வது போல நேர் எதிரான பொருளை கொண்டது. இவர்களது ஜனநாயகத்தில் யாரும் ஓட்டுப்பொறுக்க மாட்டார்கள். ஓட்டு இருந்தால்தானே பொறுக்குவதற்கு? தங்களது ஜனநாயக விரோத போக்கை இவ்வளவு வெளிப்படையாக சொன்ன பின்னாலும், இவர்களை ஜனநாயகவாதிகள் என்று யார் அழைப்பார்கள்?
என்னுடைய இன்னொரு பக்கத்தில், கம்யூனிஸ கொள்கை ஆரம்பம் முதலே தவறான கருத்துக்களால், தவறான சிந்தனைகள் மூலம் உருவான தவறான கொள்கை என்பதை காட்டியிருக்கிறேன்.
விவாதிக்க வந்த அனைத்து கம்யூனிஸ்டுகளும் தோல்வியடைந்து பின்னால், தோல்வி அடைந்தோம் என்று உணர்ந்ததும் வெறும் அவதூறில் இறங்கினர்.
தனி மரம் தோப்பாகாது என்பதன் காரணமாக, கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக ஒரு பரந்த இயக்கமாக இந்த மக்கள் இயக்கம் உருவாக வேண்டும் என்பதன் காரணமாகவும் எல்லா தரப்பு மக்களையும் இங்கே அழைக்கிறேன்.
உங்கள் கருத்துக்களை இங்கே எழுதுங்கள். நீங்கள் இந்த பதிவில் இணைய வேண்டும் என்பது என் அவா.
கம்யூனிஸ்டுகளது ஏ.கே.47களுடன் நாம் போராட முடியாது. ஆனால், அவர்களது தவறான கருத்துக்களுடன் போராட முடியும்.
அவர்கள் கொண்டுவரும் அபத்தமான கட்டுரைகளை கட்டுடைத்து அவர்களுக்கே காட்டுவோம்.
இதன் பின்னால் போய்விடக்கூடிய அப்பாவி இளைஞர்களை காப்பாற்றி தமிழ்நாட்டிலும் இந்தியாவிலும் சுதந்திரத்துக்கும், ஜனநாயகத்துக்கும் அரணாய் விளங்குவோம்.
நீங்கள் திமுக ஆதரவாளராக இருக்கலாம், அதிமுக ஆதரவாளராக இருக்கலாம், காங்கிரஸ் ஆதரவாளராக இருக்கலாம், பாரதிய ஜனதா ஆதரவாளராக இருக்கலாம், அல்லது முன்னாள் கம்யூனிஸ்டாக இருக்கலாம்.
நாம் எல்லோரும் மற்றவர்களது ஜனநாயக உரிமைகளை மதிப்பவர்கள். மக்களது ஓட்டுக்களை, அவர்களது தேர்வுகளை மதிப்பவர்கள். மக்கள் ஓட்டுப்போடும் தேர்தலில் தோற்றால், அவர்களது எண்ணத்துக்கு செவி சாய்த்து மாற்றுகட்சியினர் பதவியில் இருக்கவும், அவர்கள் தங்களது செயல்திட்டங்களை நடத்தவும் அனுமதிப்பவர்கள். மாற்றுகட்சியினரது திட்டங்களில் குறை இருப்பதாக நாம் கருதினால் அந்த குறைகளை மக்களிடம் எடுத்துச் செல்பவர்கள். அதே போல நமது செயல்திட்டங்களில் குறை இருந்தால், மாற்றுகட்சியினர் நம்மைப் பற்றி குறை சொல்லவும் ஜனநாயக ரீதியில் அனுமதிப்பவர்கள்.
ஆனால், கம்யூனிஸ்டுகள் அப்படி அல்ல. தங்களது கருத்து ஒன்றே சரி. மற்றவர்கள் கருத்து அனைத்தும் தவறு. அதுமட்டுமல்ல, தங்களை தவிர வேறொருவரும் மக்களிடம் எந்த கருத்தையும் கூறக்கூடாது என்ற நிலைப்பாட்டையும் கொண்டவர்கள். இதனால் தான் அவர்களது ஆட்சிகள் உலகம் முழுவதும் சர்வாதிகாரத்தனம் கொண்டிருந்தன. அதனையும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்று வார்த்தைஜாலத்தில் மறைத்தவர்கள்.
தமிழ்நாட்டிலும், இந்தியாவிலும் பல்வேறு துறைகளில் இந்த கம்யூனிஸ்டுகள் ஊடுருவி தங்களது ஜனநாயக எதிர்ப்பு பிரச்சாரத்தையும், பயங்கரவாத பிரச்சாரத்தையும் செய்துவருகின்றனர். தங்களது பயங்கரவாத செயல்களை வார்த்தைஜாலங்களில் மறைத்து நியாயப்படுத்தியும் வருகின்றனர். அதுமட்டுமல்ல, இவர்களை தவிர மற்றவர்கள் அனைவரையும் பயங்கரவாதம் என்று கூசாமல் சொல்லவும் நியாயப்படுத்தவும் செய்கின்றனர்.
இவர்களது செயல்களை தொடர்ந்து அம்பலப்படுத்தி இந்த கொள்கை குப்பை, ஜனநாயக விரோத, மக்கள் விரோத கொள்கை என்பதனை மக்களிடம் கொண்டு செல்லவேண்டும்.
வாருங்கள்.
--
ஸோலார்விண்ட் என்ற நண்பர் கருத்துக்கு ஏற்ப பெயரை மாற்றியுள்ளேன்.
நன்றி
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
PUCL என்ற ஒரு ஃப்ராடு அமைப்பு இந்தியாவில் நாக்சல்களுக்கும், இஸ்லாமிஸ்டுகளுக்கும் மேலும் பல வித பயங்கர வாதிகளுக்கும் முகமூடியாகச் செயல் பட்டு வருகிறது. இதற்கு எதிராக இந்த அமைப்பை PACL என்று வைக்கலாம். அதற்கு உங்கள் ஆங்கிலப் பெயரை People's anti communist League என்று மாற்றும் படி இருக்கும் அது தமிழ்ப் பெயருக்கு அருகாமையிலும் இருக்கும்.
இப்படி எழுதினீர்கள்:
"மக்கள் போராட்டம் என்ற பெயரில் மக்களை போராட வைத்து இறுதியில் மக்களை அடிப்படை தேவைகளுக்கே போராட வைத்துவிட்டதை பார்க்கிறோம்."
இதில் மக்களைப் போராட்டத்தில் அழிய விட்டு, தாம் மட்டும் பின்னால் ஒளிந்து கொண்டு, மக்கள் வென்ற பின் அதிகாரத்தில் அமர்ந்து, அந்த மக்களை ஒடுக்கி ஆண்டு, சோற்றுக்கும், துணிக்கும், வீட்டுக்கும், ஏன் வெறுமனே தெருக்களில் நடக்கும் உரிமைக்கும் கூடத் திண்டாட விட்ட அற்பத்தனம் இந்த இயக்கத்துக்கே உரியது என்று எழுதி இருக்கலாம்.
இன்னொன்று எப்படி இந்த மொத்த சித்தாந்தமும் குடியானவர்கள் அல்லது விவசாயிகளைக் கீழ் மக்கள் என்று பார்க்கிறது. மார்க்சில் இருந்து துவங்கி, லெனின், ஸ்டாலின் பின் மாவோ, பால்பாட் வரை எல்லாரும் விவசாயிகளைப் பிற்போக்குவாதிகள் என்றும் அழிக்கப் பட வேண்டிய 'வர்க்கம்' என்றும் கருதியதோடு இல்லாமல் கூட்டுடைமை என்ற பெயரில் ஓட்டாண்டிகளாக்கி, வெள்ளை சட்டை, நகரப் படித்த மேல் வர்க்க இரும்பு இதயக்காரர்களின் அடிமைகளாக்கி நாசம் செய்தனர் என்பதையும் இன்றளவும் எந்த கம்யுனிஸ்டு நாட்டிலும் விவசாயம் உருப்பட்டதில்லை என்பதையும் சுட்டி இருக்கலாம். தொடர்ந்து பிற நாடுகளிடம் கப்பரை ஏந்துவதே கம்யூனிஸ்டு நாடுகளின் முதல் முதல் வேலை என்பதையும் சுட்டி இருக்கலாம். எப்படி மேற்கு வங்கம் 40 ஆண்டுகளாக மத்திய அரசிடம் கப்பரை ஏந்தியும், இன்னமும் சாதாரணத் தேவைகளைக் கூட- குடிக்கத் தண்ணீர், மின் சக்தி, பள்ளிகள், மூன்று வேளை உணவு - மக்களுக்கு அளிக்க முடியாமல் இருப்பதைச் சுட்டலாம். எங்கேதான் போயிற்றோ அத்தனை ஆயிரக்கணக்கான கோடி கோடி ரூபாய்களும். விழலுக்கிறைத்த நீர்போல என்பதற்கு மேற்கு வங்க கம்யூனிஸ்டுகளின் ஆட்சி ஒரு கண் கூசும் உதாரணம்.
குறிப்பாக எந்தப் பாட்டாளியும், எந்த விவசாயியும் இவர்களைக் கண்டாலே ஒரு ஆயிரம் மைல் தள்ளி நிற்க வேண்டிய கொடுங்கோலர்கள் இவர்கள். இதை உலகில் பல நாடுகளில் திரும்பத் திரும்ப நிரூபித்துள்ளார்கள்.
வாழ்த்துக்கள்.
'புதிய ஜனனாயகம்' என்ற பெயரே ஒரு நகைமுரண் என்று பல பேர்களுக்கு புரிவதில்லை !!!
பி.யு.சி.எல் அமைப்பு தேவைதான். முக்கிய பணி புரிகிறார்கள். ஜனனாயகத்தில் இவர்கள் கட்டாயம் தேவைதான். உண்மைகளை வெளி கொண்டுவரும் மாபெரும் சேவைகள் இவை. அவர்களுது இடதுசாரி கருத்துக்களை பொருட்படுத்த தேவை இல்லை. Exposing facts, data and info wherever human rights are suppressed is a vital aspect of true democracy. only then can corrective actions be taken.
Democracy is gentleman's game. unfortunately terrorists or naxals are no gentlemen. that is they use violence and terror. hence to fight them, the state has to use similar methods where basic human rights are routinely suppressed. there seems to be no other option practically. the encounter killings are legally and technically wrong and could be regularly misused to eliminate personal enemies of the police or ruling establishment. but encounters are routinely used and widely accepted as the only way to 'eliminate' hard core criminals and terrorists, as it is virtually impossible to convict them in courts beacuse of lack of evidence or witnesses brave enough to testify in courts.
there is a contradiction in these issues. EU or US police do not have to do encounters to eliminate mafia or criminal daadas like here. their law enforcement and system is much more transparent and efficent...
திரு.அதியமானுடைய ஒரு கருத்தோடு நான் ஒத்துப் போகிறேன். PUCL அல்லது மனித உரிமைக்காகப் போராடும் அமைப்புகள் ஒரு ஜனநாயக அமைப்புக்கு அவசியம்தான். ஆனால் இந்தியப் பியுசில் இன்றைய தேதிக்கு முழுவதும் இந்திய எதிர்ப்பு சக்திகள், இடது தீவிர வாதிகள், நாக்சல்கள், மேலும் இந்திய அரசின் மேலாட்சியை எதிர்ப்பவர்கள், நாட்டுப் பிரிவினை வாதிகள், பயங்கரவாதிகள் ஆகியோரின் அல்லது அவர்களின் கைப்பொம்மைகளின் பிடியில் இருக்கிறது. அந்த அவல நிலை மாறி உண்மையான தேசிய வாதிகளின் கையில் அந்த அமைப்பு வராத வரை அதை ஃப்ராடு அமைப்பு என்றுதான் நான் கருதுவேன். அரசு என்பதே பயங்கர அமைப்பு என்று கருதும் குப்பைகள் அறிவுஜீவி என்ற பெயரில் பியுசில் அமைப்பில் மேல்தட்டில் உட்கார்ந்திருக்கிறார்கள். இந்தக் குப்பைகள் தூக்கி எறியப்படாத வரை பியுசில் ஒரு குப்பை அமைப்புதான். சட்டம் ஒழுங்கு, இந்திய ஒருமை, இந்திய தேசியம் ஆகியவற்றை மனத்தளவிலும், செயலளவிலும் ஏற்கும் மனிதர்தான் பியுசில் அமைப்பில் இருந்து அரசின், அரசதிகாரிகளின், மேலும் இதர கட்சிகள், தனிநபர்கள், பலவேறு பொருளாதார, கலாச்சார அமைப்புகளின் இயக்கத்தில் மனிதர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டால் அல்லது அழிக்கப்பட்டால் அவற்றை எதிர்த்துக் குரல் கொடுத்து, தகவல் சேகரித்து, ஆவணமாக்கி, நீதிமன்றங்களிலும், பொது அரங்கிலும் நியாயம் கேட்கும் செயலைச் செய்ய தார்மிக உரிமை பெற்றவராக இருக்க முடியும்.
இரண்டாவது- அமெரிக்க, யூரோப்பிய அரசுகள் வெளிப்படையான அரசுகள் என்று சொல்வதை என்னால் ஏற்க முடியவில்லை. பொதுவாக ஒப்பீட்டில் மேலை ஜனநாயக அமைப்புகளில் மக்களுக்குக் கூடுதலான உரிமைகளும், அநீதிக்கு எதிராகப் போராடும் வாய்ப்புகளும் உண்டு என்பது சரியாக இருக்கலாம். ஆனால் அமெரிக்க அரசின் ரகசிய அமைப்புகள் பெருமளவு சாதாரண சட்டங்களுக்கு வெளியில் இயங்கி வந்திருக்கின்றன. உலக அரசியல் அரங்கில் அவை விளைத்த நாசங்கள் பல, இவையே இந்த கம்யூனிச நாச சக்திகள் வளரவும் காரணிகளாக இருந்திருக்கின்றன. ஜனநாயகம் என்பது கடினமான அமைப்பு. எளிதில் கருகும் பயிர். இதை உணமையிலேயே கண்ணீர் விட்டுத்தான் வளர்க்க வேண்டும். சர்வேசன் உதவ மாட்டார், மக்கள் நேசர்தான் உழைத்து உதவ வேண்டும். மக்கள் நேசர்கள் உண்மையான ஜனநாயகம் என்பது மாற்றுக் கருத்துகளுக்கு இடம் கொடுத்து, செவி மடுத்து நியாயத்தை ஏற்பது என்பதைத் தம் அடிப்படைக் கொள்கையாகக் கொண்டவராக இருப்பார் என்பது என் துணிபு.
Results and data obtained and publihsed matter more than the personal ideaologies of the members of PUCL or any other organisation. Are the data, information, reports published by PUCL wrong, lies, distortion of data or manipulation of information, etc ? if it can be proved so,then they can be opposed (even sued) in suitable forums.
Blindly rejecting all their reports or their attitude as unacceptable seems wrong, unfair and irrational.
Facts, reports and other data should be countered with other reports, data and info. that is the correct way, in all cases and issues, regardless of the personal idealogies of the concerned persons...
It is a sad and bitter truth that many many inncocents and other bystanders are killed or affected in the crossfire when 'terrorism' is supressed. it is impossible to isolate and identiy the truely innocents from real criminals or terrorists in a densely populated civilian areas. For e.g hundreds of innocents were tortured and jailed in Sathyamangalam area while the STF tried to nab Veerappan for many years. It is virtually impossible for the police to identify real collabarators of Veerappan from innocent villagers. Same in Kashmir. Pls see :
http://www.swaminomics.org/articles/20070909.htm
but in these cynical times, we rationalise such actions as 'we cannot make omlettes without breaking eggs' ; unless we or our kin are personally affected or victimised in such actions, out views will be different. that is, subjective.
அதியமான்,
அப்பாவிகள் பாதிக்கப்படுகிறார்கள் என்று நீங்கள் கூறுவது மிகச்சரியானது.
ஆனால், PUCLஇன் வீரப்பனை முதல் குற்றவாளியாக ஆக்கவேண்டும் இல்லையா? அது செய்யப்பட்டிருக்காது. வீரப்பன், நக்ஸலைடுகள் போன்றோர் அப்பாவிகள் பின்னால் ஒளிந்து கொள்வது முதலாவது குற்றம் என்று குறிப்பிடப்பட வேண்டும். அது போல எங்கேனும் பியுசிஎல் ஆவணங்களில் இருக்கிறதா என்று பாருங்கள்.
பியுசிஎல் ஆவணங்கள் இந்திய போலீஸையே முதல் குற்றவாளியாகவும், இந்திய அரசாங்கத்தையே முதல் குற்றவாளியாகவும் ஆக்கும். அதனை அரசு பயங்கரவாதம் என்று எழுதி மக்களிடம் அரசுக்கு எதிரான எதிர்ப்புணர்வை வளர்க்க முயலும்.
இருப்பினும் தேர்தல் நடக்கும்போது, மக்கள் திமுக அதிமுகவுக்குத்தான் வாக்களிப்பார்கள். நக்ஸ்லைட்டுகளுக்கோ கம்யூனிஸ்டுகளுக்கோ வீரப்பனுக்கோ வாக்களிக்க மாட்டார்கள். பியுசிஎல் மண்டையை பிய்த்துக்கொள்ளும்!
அதனால்தான் தேர்தலே இல்லாத ஒரு அமைப்பை நக்ஸ்லைட்டுகள் விரும்புகிறார்கள்.
Hi ,
This old anony.
I agrre with Athiyman.
Yes, PUCL is much needed in India as a watchdog for human rights violations by the givt and should function with the fifth estate of journalism. Unfortunatelty PUCL in India is openly Naxal orineted and does not have any mechanism for open dialogue. It argued in Best Bakery case for Hindus killing the muslims and rightly so. But completely ignored the Hindu victims. The same is the case with Naxal violence. It argued for releasing Naxal criminals ignoring their crimes against common man.
I think we should engage PUCL and make it impartial.
Anony(1)
Post a Comment