Sunday, January 13, 2008

பொதுப்புத்தியில் கம்யூனிஸமும் கம்யூனிஸ்டுகளின் திட்டங்களும்.

பொதுப்புத்தியில் கம்யூனிஸமும் கம்யூனிஸ்டுகளின் திட்டங்களும்.

இன்றைக்கு பலரும் தன்னை கம்யூனிஸ்டு என்று குறிப்பிட்டுக்கொள்வதை பார்க்கிறோம். என்ன காரணமாக இருக்கும்? முதலாவது இந்தியாவில் பலரும் கம்யூனிஸத்தை ஆழ்ந்து படித்து, அலசி, பல்வேறு சிந்தனையாளர்களுடன் விவாதித்து, அறிவியல் கண்டுபிடிப்புகளில் அவற்றை உரசிப்பார்த்து கம்யூனிஸமே சிறந்த தத்துவம் என்று கண்டடைந்தவர்கள் அல்ல. அப்படி உரசிப்பார்த்தவர்களில் ஒருவர் கூட கம்யூனிஸ்டாக தொடர்ந்ததும் இல்லை. ஆயிரக்கணக்கானவர்கள் அப்படி கம்யூனிஸ கொள்கையை துறந்து வெளியேறியிருக்கின்றனர். கம்யூனிஸ கொள்கையை துறந்த பலர் தீவிர வலதுசாரி என்று சொல்லும் அளவுக்கு திசை திரும்பியவர்களும் உள்ளனர்.

ஆனால், பொதுப்புத்தியில் கம்யூனிஸ்டு என்பவன் ஒரு நல்லவர், அவர் ஏழைகளுக்காக பாடுபடுகிறார், அவர் தொழிலாளர்கள் நல்ல ஊதியம் பெறவேண்டும் என்று போராடுகிறார், வலிமையுள்ள பணக்காரர்களை எதிர்த்து ஒரு ராபின்ஹூட் போல ஏழைகளுக்காக போராடி அவர்களுக்கான உரிமைகளை, பணத்தை நிலத்தை பெற்றுத்தருகிறார் என்ற பிம்பம் இருக்கிறது. இதுதான் கம்யூனிஸ தத்துவம் சொல்கிறது என்றும் பொதுப்புத்தியில் பிம்பம் இருக்கிறது.

இதனாலேயே கலைஞர் கருணாநிதியும், மற்றவர்களும், "இதுதான் கம்யூனிஸ்டு என்றால், நானும் ஒரு கம்யூனிஸ்டுதான்" என்று கூறுகிறார்கள். அவர் கூறுவது சரியானதும் உண்மையானதும் ஆகும்.

பொதுப்புத்தியில் இப்படி ஒரு பிம்பம் இருப்பதால், கம்யூனிஸ்டுகள் வன்முறையை கையில் எடுத்து கொலை, கொள்ளை, ரயில் தண்டவாள கவிழ்ப்பு, பொதுமக்களையும் போலீஸ்காரர்களையும் தாக்கி கொல்லுவது, பெரிய மக்கள்தலைவர்களை கொல்வது, சந்தையில் வெடிகுண்டு வெடிப்பது என்று ஆயிரக்கணக்கான பயங்கரவாத செயல்களை செய்தாலும், இதெல்லாம் ஏழைகளுக்காக, தொழிலாளர்களுக்காக என்ற பொதுபிம்பமும், அதன் ஊடாக, ராபின்ஹூடின் வன்முறையை நியாயப்படுத்தும் தொனியில் கட்டுரைகளும் எழுதப்படுகின்றன. அப்படி எழுதுபவர்கள் நீதியின் பக்கம், நியாயத்தின் பக்கம் தாங்கள் இருக்கிறோம் என்றும் தங்களை தாங்களே நம்பிக்கொள்கிறார்கள்.

ஆனால், கம்யூனிஸ கட்சிகளில் உள்ளவர்கள் கலைஞர் கருணாநிதியை கம்யூனிஸ்டு என்று ஒப்புக்கொள்வார்களா? நிச்சயம் மாட்டார்கள். ஏன் சொல்லப்போனால், மற்ற கம்யூனிஸ்டு கட்சியில் உள்ளவர்களை, அவர்கள் கம்யூனிஸ்டு என்று கூட ஒப்புக்கொள்ளமாட்டார்கள். கம்யூனிஸ கட்சிகள் ஒரு கல்ட் போன்றவை என்பதற்கு அவைகள் எப்படி கட்சி கட்டுகின்றன என்பதை பார்த்தாலே தெரியும். தாங்கள் சார்ந்திருக்கும் கிறிஸ்துவ பிரிவில் உள்ளவர்கள் மட்டுமே உண்மையான கிறிஸ்துவர்கள், நாங்கள் மட்டுமே சொர்க்கத்துப் போவோம் என்று பேசும் கிறிஸ்துவர்கள் போல, தாங்கள் சார்ந்திருக்கும் இஸ்லாமிய பிரிவில் உள்ளவர்கள் மட்டுமே உண்மையான முஸ்லீம்கள், நாங்கள் மட்டுமோ சொர்க்கத்து போவோம் என்று பேசும் முஸ்லீம்கள் போல இவர்களிலும் ஏராளமான பிரிவுகள் உண்டு. தாங்கள் மட்டுமே உண்மையான மார்க்ஸிய கம்யூனிஸத்தை புரிந்துகொண்டுள்ளோம், எங்களால் மட்டுமே உண்மையான கம்யூனிஸ சமுதாயத்தை அமைக்கமுடியும் என்று பிதற்றி மற்றவர்களை வன்முறை மூலம் ஒடுக்கவும் முயல்வதை, முயன்றதை வரலாறு கூறுகிறது.

ஆனால், இன்றைக்கு கலைஞர் கருணாநிதி அவ்வாறு தன்னையும் கம்யூனிஸ்டு என்று கூறிக்கொள்வது கம்யூனிஸத்துக்கு ஒரு விளம்பரம், அது கம்யூனிஸத்தை புனிதப்பிம்ப இடத்தில் உட்கார வைக்கும் என்பதை உணர்ந்தவர்கள் அவர்கள். அதனால், போர்த்தந்திர முறையில் திமுகவினரை அனுசரித்தும், திமுகவில் இருப்பவர்களை தங்கள் கட்சிக்குள் இழுப்பதற்காகவும், அதனை பயன்படுத்திக்கொள்வார்கள். இதுதான் கம்யூனிஸ்டுகளின் இரட்டை நாக்கு.

கம்யூனிஸ்டுகள் உலகெங்கும் ஒரு குறிப்பிட்ட செயல்திட்டத்தை அறிமுகப்படுத்தினார்கள். அது என்னவென்று பார்த்தோமானால், அதன் மூலம் யார் பயன்பெறுவார்கள் என்பதை எளிதில் கண்டுபிடித்துவிடலாம்.

அது திட்டமிட்ட பொருளாதாரம். அதாவது அரசாங்கத்தில் உள்ள அதிகாரிகள், எந்த பொருளை எந்த தொழிற்சாலை எவ்வளவு தயாரிக்க வேண்டும் என்று திட்டமிடுவார்கள். அதனை மக்கள் உற்பத்தி செய்யவேண்டும். அவ்வளவுதான். ஒரு மனிதனுக்கு பொருளாதார சுதந்திரம் இருக்கக்கூடாது. அவன் ஒரு பொருளை தயாரித்து மற்றவர்களிடம் விற்றால் அது தடைசெய்யப்படும். இதுதான் சோசலிஸ கட்டுமானம்.

இது எவ்வளவு பெரிய சீரழிவை உலகெங்கும் கம்யூனிஸ அமைப்புக்குள் சிக்கிக்கொண்ட மக்களுக்கு கொண்டுவந்தது என்று சொல்லித்தெரியவேண்டியதில்லை. இதுதான் கம்யூனிஸம். இதனை நீங்கள் ஆதரிக்கிறீர்களா என்று கலைஞரிடம் கேட்டுப்பாருங்கள். இல்லை என்று சொல்லிவிடுவார்.

இந்த கம்யூனிஸ சோசலிஸ அமைப்பின் மூலம் பலனடைவது யார்? கம்யூனிஸ்டு கட்சியிலும், மேல்மட்ட குழுவிலும், போலிட்பரோவிலும் உட்கார்ந்திருக்கும் அதிகார வர்க்கம் மட்டுமே இதன் மூலம் பலனடையும். மற்றவர்கள் எல்லோரும் இவர்களுக்கு அடிமைகள். எதிர்த்தால், வர்க்க எதிரி. ஒத்துழைக்கவில்லை என்றால் பிற்போக்குக்காரன். இந்த அதிகார வர்க்கத்தின் கீழ் அடக்குமுறையில் இருக்க முடியாது என்று தொழிலாளர்கள் தனியே தொழிற்சங்கம் வைக்க முடியாது. ஏதேனும் ஒரு அதிகாரி கிறுக்குத்தனமாக ஆணையிட்டு எத்தனையோ பொதுமக்கள் அழிந்தாலும், அது "ஆம்லெட் செய்யவேண்டுமென்றால், முட்டைகளை உடைத்துத்தான் ஆகவேண்டும்" என்று உதாசீனம் செய்யப்பட்டுவிடும். இதுதான் கம்யூனிஸம்.


மனிதனுக்கு கருத்து சுதந்திரம், பொருளாதார சுதந்திரம் ஆகியவை அத்தியாவசியமானவை. என்னுடைய கருத்துக்களை சொல்லவும், என்னுடைய நேரத்தில் பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடவும் எனக்கு சுதந்திரம் வேண்டும். இரண்டையுமே முழுதாக மறுக்கிறது கம்யூனிஸம்.

கம்யூனிஸத்தை குப்பை என்று ஒதுக்க, கம்யூனிஸம் பற்றிய ஆழ்ந்த அறிவோ அல்லது பரந்த படிப்போ கூட தேவையில்லை. கம்யூனிஸ்டு நாடுகள் செய்த கூத்துக்கள் தமிழ்நாட்டில் பரவலாக தெரிய வந்தாலே போதுமானது. ஆனால், அப்படி பரவலாக தெரிய வரக்கூடாது என்று கம்யூனிஸ்டுகள் பெரும் சிரத்தை எடுத்துக்கொள்கிறார்கள். இதனால்தான், சோவியத் ஸ்டாலின் பற்றியோ, அல்லது போல்போட் பற்றியோ, மாவோவின் உண்மையான வரலாறோ தமிழில் வந்துவிடக்கூடாது, இந்திய ஊடகங்களில் வந்துவிடக்கூடாது என்று சிரத்தை எடுத்துக்கொண்டு அப்படி யாரேனும் ஏதேனும் ஒரு வரி எழுதிவிட்டால் கூட அந்த பத்திரிக்கை அலுவலகத்தின் முன்னே நின்று ஆர்ப்பாட்டம், ஊர்வலம் என்று பிரச்னை பண்ணுகிறார்கள். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு ருசி என்பது தமிழ் பழமொழி. சோவியத் ரஷியா, கம்யூனிஸ்ட் சைனா, சிவப்பு கம்போடியா, வியத்நாம், கியூபா என்று உலகெங்கும் இந்த கொள்கை விளைவித்த கொடூரம் தெரிந்திருந்தும், இன்னமும் இதில் நம்பிக்கை வைத்திருப்பவர்களை கண்டால் பரிதாபமாகவே இருக்கிறது.

கம்யூனிஸம் ஒரு சர்வாதிகார சிந்தனை. ஏழைகள், விவசாயிகள், தொழிலாளர்கள் என்ற பெரும்பான்மையை தன் கைப்பிடிக்குள் கொண்டு வந்து அவர்களை நசுக்கி சக்கையாய் பிழிந்து ஆள ஒரு சிறு குழு போடும் திட்டம். அதுதான் விவசாயிகள், தொழிலாளர்கள், ஏழைகளுக்கும் நல்லது என்று அவர்களிடமே பிரச்சாரம் செய்யும் ஒரு மனப்பிறழ்வு கொண்ட சிந்தனை.

உண்மையிலேயே கம்யூனிஸ்டுகளுக்கு தொழிலாளர்கள் மீதோ, விவசாயிகள் மீதோ, மக்கள் மீதோ ஏதேனும் நம்பிக்கையோ, பாசமோ உண்டா?
கம்யூனிஸ சிந்தனைகளை ஆழ படிப்பவர்கள் மார்க்ஸ் எங்கல்ஸ் லெனின் மாவோ போன்றோரின் வரிகளில் விவசாயிகள் மீது எப்படிப்பட்ட காழ்ப்புணர்வை கொண்டிருக்கிறார்கள் என்பதை படித்து திடுக்கிடலாம். தொழிலாளர்களுக்கு ஒன்றும் தெரியாது. மெத்த படித்த நாம்தான் அவர்களின் உள்ளே புகுந்து அவர்களை திசை திருப்பி அரசாங்கத்தை கவிழ்க்க அவர்களை தூண்டி நாம் ஆட்சியை கைப்பிடிக்க வேண்டும் என்று எழுதியிருப்பதை பார்த்து அதிரலாம். இவர்களது பொலிட்பரோவில் எவரும் விவசாயியோ, தொழிலாளரோ, நிலமற்ற கூலியோ கிடையாது. எல்லோரும் பெரிய குடும்பத்தில் பிறந்து நன்கு படித்து, துயரத்தின் வாடையே இல்லாமல் வளர்ந்தவர்கள். இது மார்க்ஸ், எங்கல்ஸ், லெனின், ஸ்டாலின், மாவோவிலிருந்து இந்தியாவில் ஜோதிபாசு, புத்ததேவ பட்டாச்சாரியா, பிரகாஷ் காரத், பிருந்தா காரத், ராமமூர்த்தி, வினோத் மிஷ்ரா, நாகபூஷன் பட்நாயக், சிபிஎம்எல்லின் பட்டாச்சாரியா உட்பட அனைவரது பின்புலத்தை பார்த்தாலும் தெரியும். தொழிலாளர்களும், விவசாயிகளும் இவர்கள் ஆட்சிக்கு வர உதவிப்பொருள்களே அன்றி, ஆட்சியில் இருக்கப்போகிறவர்கள் அல்ல. இதனை வான்கார்ட் என்ற ஒரு கருத்தை வைத்து பூசி மொழுகுகிறார்கள். அதாவது இப்படி பணக்கார குடும்பத்தில் பிறந்து நன்கு படித்து விவசாயிகளுக்கு உழைப்பவர்கள் வான்கார்ட் என்ற முன்னோடிகளாம். விவசாயிகள் பிற்போக்கானவர்கள், தொழிலாளர்கள் விவரம் பத்தாதவர்கள். இவர்களுக்கு மட்டுமே எல்லாம் தெரியும். ஆனால் காங்கிரஸில் காமராஜர் ஆட்சிக்கு வந்ததும், ஜனதாதளத்தில் தேவ கவுடா ஆட்சிக்கு வந்ததும், தொழிலாளராக இருந்து உயர்ந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ் ஆட்சிக்கு வந்ததும், தலித்தாக கேரளாவில் பிறந்து ஜனாதிபதியாக உயர்ந்த நாராயணனும், கடற்கரை கிராமத்தில் பிறந்து இந்திய ஜனாதிபதியாக உயர்ந்த அப்துல்கலாமும், தஞ்சாவூர் கிராமத்தில் பிறந்து தமிழக முதல்வராக உயர்ந்த கலைஞரும் கேவலமானவர்கள். இன்னும் கேட்டால், இவர் தரகு முதலாளி, அவர் அரைகாலனியவாதி, இவர் மடையன், அவர் முட்டாள், இவர் கோமாளி என்று அவதூறு மட்டும் அலுக்காமல் சலைக்காமல் திட்டுவார்கள்.

இன்னும் ஆழமாக பார்த்தோமானால், கம்யூனிஸ்டு கட்சி தொண்டனுக்குக் கூட தெரியாத விஷயங்கள் கம்யூனிஸ்டு கட்சிக்குள் ஒரு சிலரால் திட்டமாக வகுக்கப்படுகின்றன. இவை உள்கட்சி ஆவணங்கள் என்று அவர்களாலேயே அழைக்கப்படுகின்றன. இங்கு, கம்யூனிஸ்டு கட்சி தற்போது எந்த போர்த்தந்திர முறைகளை பயன்படுத்தி மக்கள் நடுவே பிரச்சாரம் செய்யவேண்டும், மக்களை உள்ளே இழுக்கவேண்டும் என்றெல்லாம் திட்டமிடப்படுகின்றன. இவைகள் கம்யுனிஸ்டு கட்சி தொண்டனுக்குக் கூட தெரியாதவை. மக்களை நம்புவோம், மக்களுக்காகவே போராட்டம் என்றெல்லாம் பிதற்றும் கம்யூனிஸ்டுகள் மக்களை நம்பி இந்த ஆவணங்களை வெளியே விட வேண்டியதுதானே? விட மாட்டார்கள். இதற்காகத்தான் ஒரு சில பிரச்சார போர்தந்திர உத்திகள் உருவாக்கப்படுகின்றன.

பிரச்சார உத்திக்கு ஒரு உதாரணமும், போர்தந்திர உத்திக்கு ஒரு உதாரணமும் தருகிறேன்.

1) பெரியார் இருந்தபோது அவரை கடுமையாக விமர்சித்த கம்யூனிஸ்டுகள் இன்று பெரியாரை அரவணைத்துக்கொள்வது. தற்போது, பார்ப்பனர்களது பூணூலை அறுக்கிறேன் என்று கிளம்பி திராவிட கழகத்தினரை விட தீவிரமாக பார்ப்பன எதிர்ப்பு கொண்டவர்கள் தாங்கள் என்று காட்டிக்கொண்டு திராவிட கழகத்தில் உள்ள இளைஞர்களை கவரும் திட்டம்.

2) சாதாரணமாக மக்கள் தங்கள் பிரச்னைகளுக்காக ஊர்வலம் சென்றாலோ அல்லது கலெக்டரிடம் மனு கொடுக்க சென்றாலோ, அதன் நடுவே ஊடுருவி இருந்துகொண்டு அரசாங்கத்து ஊழியர்களையும், போலீஸையும் ஆயுதங்கள் மூலம் தாக்குவது. இதன் மூலம், போலீஸ் திருப்பி தாக்குவதன் மூலம் பொதுமக்களை போலீஸ் தாக்க வைப்பது. இதில் பாதிக்கப்பட்ட பொதுமக்களிலிருந்து இளைஞர்களை தங்களது ஆயுத புரட்சிக்கு அழைத்துக்கொள்வது.

இது போன்ற கேவலமான உத்திகள் கட்சியின் உள்ளே பொலிட்பரோ என்னும் கும்பலால் திட்டமிடப்படுகின்றன. இது போன்ற பல்வேறு திட்டங்கள் இவற்றின் ஆவணங்களில் காணலாம். இந்த கட்சிகளுக்கு எங்கே யாரிடமிருந்து பணம் வருகிறது போன்றவைகளிலிருந்து ஆயிரக்கணக்கான விஷயங்கள் இந்த உள்கட்சி ஆவணங்களில் உள்ளன.

கம்யூனிஸ்டுகள் மட்டுமே தொழிலாளர்களுக்காக உழைக்கிறார்கள், அல்லது கம்யூனிஸ்டுகள் மட்டுமே விவசாயிகளுக்காக உழைக்கிறார்கள், ஏழைகளுக்காக பாடுபடுகிறார்கள் என்று மக்களுக்கு தோன்றவேண்டும் என்பதற்காக மிகவும் சிரத்தை எடுத்து, அப்படி தொழிலாளர்களுக்காக, விவசாயிகளுக்காக, ஏழைகளுக்காக பாடுபடுபவர்களை அவதூறு செய்வதும், அவர்களை கேவலப்படுத்துவதையும் ஒரு முக்கியமான தொழிலாகவே கம்யூனிஸ்டுகள் செய்கிறார்கள்.

ஆனால், கம்யூனிஸ்டுகளை அவ்வாறு திரும்பி அவதூறு செய்ய யாரும் விரும்புவதில்லை என்பதால், இவர்கள் தூற்றுவது மட்டுமே நிலைத்துவிடுகிறது.

இதனால்தான் ஏழைகளுக்கும் நிராதரவானவர்களுக்கும் உழைத்த, உழைக்கின்ற அன்னை தெரசா, ராமகிருஷ்ண மடம், திமுக அதிமுக தொழிற்சங்கங்கள், காங்கிரஸ் தொழிற்சங்கங்கள், கம்யூனிஸம் சாராத விவசாயிகள் சங்கங்கள் ஆகியவை இவர்களால் அவதூறு செய்யப்படுகின்றன.

உண்மையிலேயே மக்களுக்கு நலம் செய்யக்கூடிய பல திட்டங்கள் கம்யூனிஸ்டுகளால் அவதூறு செய்யப்படுகின்றன. இருக்கும் சமூக சூழ்நிலையிலேயே நாம் நன்றாக வாழ்ந்துவிட முடியும் என்று பொதுமக்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் நினைப்பது கம்யூனிஸ்டுகளுக்கு ஆபத்தானது. ஆகவே, அவர்கள் தற்கால சூழ்நிலை, சமூக நல திட்டங்கள், மக்களுக்கு நல்லது செய்வதன் மூலம் ஜனநாயக ரீதியில் வாக்குக்களை பெற்று ஆட்சி வரவும், மற்ற கட்சிகள் செய்யாத நல்ல விஷயங்களை செய்ய முனைகிற கட்சிகள் தொடர்ந்து அவதூறு செய்யப்படுகின்றன. அவர்களது குடும்ப விஷயங்கள், அவர்களது தனிமனித விஷயங்கள் (உதாரணம் -சரத்குமார் மது அருந்துபவர்) போன்ற விஷயங்கள் ஊதி பெரிதாக்கப்பட்டு ஜனநாயக அரசியல்வாதிகள் மீது வெறுப்பு மக்களிடையே வளர்க்கப்படுகிறது. அதே நேரத்தில் கம்யூனிஸ பிதாமகர்களான ஸ்டாலின், மார்க்ஸ், லெனின், மாவோ, போல்போட், கிம் இல் ஜுங் (இவர்கள் மது அருந்தமாட்டார்களா?) போன்ற அசிங்கங்கள் கையை தூக்கி போஸ் கொடுத்துக்கொண்டே இருந்தார்கள், அவர்கள் சொன்னதெல்லாம் வேதவாக்கு, அவர்கள் உலகமகா புனிதர்கள் என்பது போல எழுதப்படுகின்றன.

நாம் இவர்களும் ஒரு கட்சியினர் என்று நினைக்கிறோம். அதனால், இவர்களது கருத்துக்களை அனுமதிக்கிறோம். இவர்கள் மற்ற கட்சியினரை அவதூறு செய்வதையும், எல்லா கட்சியினரும் அவதூறு செய்கிறார்கள் அதே போல இவர்களும் செய்கிறார்கள் என்று அனுமதிக்கிறோம். இவர்கள் விளிம்புநிலையில் அரசியல் செய்பவர்களாக இருப்பதால், இவர்களை நாம் பொருட்டாக மதித்து பதிலும் சொல்வதில்லை. மற்ற கட்சியினரும் இவர்களுக்கு பதில் சொல்லி இவர்களை பெரிய ஆளாக ஆக்க விரும்புவதில்லை.

யாரும் இவர்களுக்கு பதில் சொல்வதில்லை என்பதால், தாங்கள் சொல்வதற்கு எவனாலும் பதில் சொல்ல முடியாது என்று இவர்களாக நினைத்துக்கொண்டுவிட்டார்கள். (ஒரு மூலையில் உட்கார்ந்திருக்கும் என் பதில் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் ஓடிவிட்டார்கள். உண்மையிலேயே அதிமுகவினரும் திமுகவினரும் இவர்களது கொள்கையை ஆராய்ந்து கிண்டினால் இரண்டு நாள் தாங்குவார்களா?) இளையதாக முள்மரம் கொள்க என்று அய்யன் வள்ளுவன் வாக்கு. அதனால், வளரும்போதே, இந்த முள் மரத்தை வேரோடு பிடுங்கிவிடவேண்டும் என்று இந்த கட்டுரைகளை எழுதுகிறேன்.

2 comments:

Anonymous said...

நான் பழைய அனானி.
வணக்கம்.
பெரியார் எப்படி கம்யூனிஸ்டுகளை ஆதரித்தார் என்று அசுரன் அல்ல்து அசுரனின் வேறொரு பெயர் /ஆள் எழுதியிருப்பதைப் படித்தேன்.
பெரியாரின் வாழ்க்கையில் அவர் ஆதரவு தந்தவை கம்யூனிஸ்டுகள் மட்டும் அல்ல். 20 வருடங்கள் அவர் தி மு கவை எதிர்த்து காமராஜர் ஆட்சிக்காக காங்கிரசுக்கு பிரசார செய்தார். அதனால் அவர் காங்கிரஸ் ஆதரவாளர் , தி மு கவின் எதிரி என்று சொல்ல வேண்டும். பிறகு அவரே காங்கிரஸை விட்டு தி மு கவை ஆதரிதார் அதனால் வரை திமுகவுக்குச் சொந்தம், காங்கிரஸ் எதிரி என்று சொல்லவேண்டும். அவர் ஒரு காலகட்டத்தில் ஆங்கிலேயர் விடுதலை அளிக்கக் கூடாது என்று வாதிட்டார் அதனால் அவரை பிரிட்டிஷ் ஆதரவாளர் என்று சொல்ல வேண்டும். கீழ்வெண்மணிபிரசினையின் போது கம்யூனிஸ்டுகளை எதிர்த்தார் அதனால் அவரை கம்யூனிஸ்டு எதிரி என்று சொல்ல வேண்டும்.

இப்படிப் பட்ட முரணபாடுகளை அவரே அறிந்திருந்தார். அந்தந்த காலகட்டத்தில் , எதுமக்களுக்கு நல்லது என்று தோன்றுகிறதோ அதைச் செய்வது தான் தன் வேலை என்றும் , முன்னுக்குப் பின் முரணாய் இருப்பது பற்றி தனக்குக் கவலை இல்லை என்றும் அவர் சொல்லியிருக்கிறார். அவர் பகத் சிங்கையும், கம்யூனிச விளக்கத்தையும் வெளியிட்டுரிக்கிறார் தான் ஆனால், அதன் அடிப்படை காரணம் என்ன என்பது நாம் ஆராய வேண்டும். அவர் தன்னளவில் நாத்திகக் கருத்துகளையும் , மனித ஏற்றத் தாழ்வு கற்பிக்கும் மதச் சிந்தனைகளையும் எதிர்த்தார். அவருக்கு முன்பு ஸ்தூலமாய் இருந்த இந்து மதத்தின் அநீதிகளை எதிர்த்துக் குரல் கொடுத்தார்.

அவரே பெர்ட்ராண்ட் ரஸ்ஸலின் "நான் ஏன் கிருஸ்துவன் அல்ல" நூலையும் வெளியிட்டிருக்கிறார். ரஸ்ஸல் கம்யூனிச சித்தாந்தத்தை எதிர்த்தவர். அதனால். பெரியாரும் அதனால் கம்யூனிச எதிரி என்று சொல்லலாமா? இல்லை. ரஸ்ஸலை அவர் எடுத்துக் கொண்டது அவர் நாத்திகக் கருத்துகளுக்காக.

இதெல்லாம் தெரியாமல் பெரியாரைக் கம்யூனிஸ்டாய்க் காண்பித்து பெருமைப் பட்டுக் கொள்வது கம்யூனிஸ்டுகளின் தந்திரம் தானே தவிர வேறில்லை.

அவர் அந்தக் காலகட்டத்தில் கம்யூனிசக் கருத்துகளுக்கு ஆதரவு தெரிவித்ததில் வியப்பில்லை. அந்தக் காலகட்டத்தில் , ரஷ்யப் புரட்சி வெகுவாக கால்னியாதிக்க நாடுகளிடையே நம்பிக்கையை விதைத்திருந்தது. ஸ்டாலினின் கொலைகள் இன்னமும் பரவ்லாய்த் தெரிய ஆரம்பிக்கவில்லை. அமெரிக்கா வியத்நாமை ஆக்கிரமித்தது கம்யூனிச ஆதரவு அலை வீச இன்னொரு முக்கிய காரணம். ஆனால் காலப் போக்கில் கம்யூனிஸ்டுகளின் கொடூரங்கள் வெளியே தெரியவரலாயின. ஹங்கேரி, கிழக்கு ஜெர்மனி போன்ற நாடுகளில் நடந்தவையும், சைபீரியா சிறைச்சாலைக் கொடுமைகளும், ஆள்மறைதல் போன்ற எதேச்சாதிகாரமும் தெரிய வந்த பிறகு, ஐரோப்பாவில் கம்யூனிஸ்டுகளுக்கு இருந்த ஆதரவு குறைந்தது. சோஷல் டெமாக்ரடிக் கட்சிகள் உருவாயின. மக்களின் நலத்திட்டங்களுக்கு மூலதன் வளர்ச்சியும் அதனால் கிடைக்கும் வரிப்பணமும் மிக அவசியம் என்று அவர்கள் புரிந்து கொண்டார்கள். இதாலி , ஃபிரான்ஸ் போன்ற நாடுகளில் உள்ள கம்யூனிஸ்டுக் கட்சிகளும் கூட புரட்சி போன்ற கையாலாகாத கோரிக்கையைக் கைவிட்டு , மக்கள் நலத் திட்டங்களில் கவனம் செலுத்தலாயினர். கிட்டத்தட்ட அதே போல் இந்தியாவிலும், வலது இடதுசாரி கம்யூனிஸ்டுகளும் தேர்தலில் பங்கு பெற்று வளர்ந்தனர்.

இந்த வரலாறு தி கவினருக்குத் தெரியும். அவர்கள் சட்டரீதியாகவும், வன்முறை தவிர்த்த போராட்டங்களையும் கைக்கொண்டு பெரியார் வழியில் போராடுகிறவர்கள். அவர்களுடன் இணைகிற கம்யூனிஸ்டுகள் தி க வினரை வளைத்துப் போட எண்ணி தி க வினரைவிட அதிகமாய் பிராமண எதிர்ப்பு வேடம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதனால் தான் இந்த கருத்துகளுக்கு, அசுரன் போன்றவர்களிடமிருந்தும், திராவிட வேடம் போடும் அசுரக் குஞ்சுகளிடமிருந்தும் பதில் வருகிரது. தி க வினர் உண்மையை உணர்ந்து மௌனம் சாதிக்கின்றனர்.
பழைய அனானி.

I am posting here as your blog does not accept anony comments

Anonymous said...

Atlantic Monthly Press

Marx's Das Kapital
By Francis Wheen
Atlantic Monthly Press
144 pages. $19.95

Spreading the Word

Francis Wheen's biography of Marx's "Das Kapital" uncovers a cryptic book that took on a life of its own.

By Lesley Chamberlain
Published: February 1, 2008

This "biography" of "Das Kapital," "a book that changed the world," is Marx for the age of choice. There's no compulsion to read the bible of anti-capitalism anymore, but you might want to. British writer Francis Wheen, author of a prize-winning biography of Marx that stressed the theorist's carbuncles as much as his communism, sets out the attraction of a new Marx for the 21st century in this engaging essay. Effectively an introduction detached from the main text, it is in its way an important read, providing a shortcut into the ongoing story of modern times.

The man who fused German philosophy, French politics and English economics into a new materialist vision of progress left as his main work a book no one wanted to read. I recently picked up a secondhand copy in the Oxford World's Classics edition for 50 pence. That it was abridged and introduced by Marx's foremost contemporary editor, David McLellan, suggested I might finally master it. Like the history of the Latin-speaking church, full of priests who never mastered Latin, the history of Marxism is littered with Marxists, and historians, defeated by the text.

In its three ill-organized and unfinished volumes, "Capital" was the original loose-and-baggy monster of 19th-century political economy. It shared with the great Russian novels, to which the writer Henry James applied that phrase, vastness and emotional power. Still, Marx shouldn't be allowed, even posthumously, to call "Capital" a work of art. The imagery is rich, the author highly educated, and there is a fabulous vision of relentless production lines, of the kind that would inform Fritz Lang's film "Metropolis" 50 years later. Yet even Engels railed against its unreadability.

Marx's own advice to those daunted by the arid opening section on commodities was to read the chapters on "The Working-Day," "Machinery and Modern Industry" and "Capitalist Accumulation" first. Wheen follows McLellan in taking this recommendation and much else. His book is original in manner, not content. But the strategy is right because it plunges us straight into what the good Marx was about: exploitation.

The ruthless labor conditions in industrial England on which Marx notoriously based his universal economic theory reduced men, women and children to slavery, despite the efforts of state-authorized Factory Inspectors to reduce hours and protect those under the age of 13. Even doctors supplied false reports that were favorable to the employers, according to material provided by Engels, the factory-owner's son who acted as a mole. Far from liberating labor, complex machinery actually worsened conditions by creating a fluctuating demand for low-paid robotic shift-work. The capitalist employer kept vast armies of would-be workers in suspense and penury while he adapted his output to market conditions. He mortgaged his own soul for increased profit.

Marxist economics used to detail this injustice by measuring the amount of labor required to keep a worker and his family alive against the surplus value of labor squeezed out of him for the capitalist's benefit. But, with the economics long modified and outmoded, it is exploitation that we can more easily hang on to as the viable Marxian legacy, together with its social product, alienation. A man alienated from the product of his own labor is a man uprooted from the world where he once belonged. The theme of alienation, Wheen argues, shows us not only what Marx took from Hegel but also how the author of "Capital" qualifies to be spoken of in the same breath as the early modernist writers T.S. Eliot and Franz Kafka. Postmodern analyses of rampant consumerism are built on these complex literary and Marxian fundaments. Still, all this does not make Marx an artist. The lack of psychological subtlety in "Capital," with its fat capitalists pitched against the abused honest people, is as ridiculous as the high age of the Soviet cartoons it inspired. What Marx does begin to describe is the harm of a world in which our every last word and breath is commodified, as now.



Itar-Tass
Sailors gather by the steamship "Karl Marx" in 1930.

Wheen is right to stress that by the "immiseration" of the people Marx meant the crushing of the human spirit, not just material poverty. In doing so, he reclaims the alienation story for Marx to the same extent that hard-line Marxists used to dismiss it as an early aberration. By claiming Marx for early modernism he repeats what the New Left tried to do in the 1960s when they, too, rediscovered in the project to overcome alienation a way of accentuating communism's human side. Without Marx, will all the millions now practicing an exhausting post-Marxist religion of work ever wake up to the fact that earning money is not the point of life? Let's hope so. It's only not clear to me that Wheen -- who is a cool, emotionally spare, intellectually agile postmodern writer, more impresario than critic -- actually wants this, or anything else. Meanwhile, is Marx, the quintessential materialist, a good enough philosopher of alienation? These days, materialism has two meanings: one philosophical and the other consumerist, and many philosophers must, like me, feel anguish at their deliberate confusion to create market "reality." Marx distinguishes between appearance and reality out of Hegelian habit, but as a materialist he can't help us explain the spiritual reality he wants to rescue.

"Capital" illuminated a Western malaise caused, Marx believed, by a passing economic system whose internal contradictions would eventually destroy it. That would be the moment for political and economic revolution. In practice, Marxian revolution was foiled in the West when social democracy stepped in. The impact of Marx remained intellectual and circumstantial, helping to bring those milder forces about and leading so many of us to equate well-being with material provision. Wheen quotes the English writer James Buchan saying in 1997 that "Marx is so embedded in our Western cast of thought that few people are even aware of their debt to him." We live, post-Marx, in a well-intentioned, if naively unspiritual world.

The tragic effect "Capital" had in Soviet Russia and perforce in its satellites was quite a different story. '"Isn't it an irony of fate,' Marx wrote to Engels, 'that the Russians, whom I have fought for 25 years, always want to be my patrons? They run after the most extreme ideas the West has to offer, out of pure gluttony.'" The world's first translation of "Capital," in 1872, was from German into Russian, and in sharp contrast to later English sales, its 3,000 copies immediately sold out. Russia was greedy for Marx, but an aging, sick Marx, hungry for success, was also keen to tell the Russian Populists what they wanted to hear: namely, that Russia's different conditions need not be an obstacle to communism. Wheen says Marx "agonized" over his reply to activist Vera Zasulich, who demanded an authoritative opinion on Russia, but he also quotes a letter to Marx's daughter Jenny praising the terrorists who had just assassinated Alexander II for their "historically inevitable mode of action." Marx's readiness to manipulate his theory to suit the case -- his "dialectical dalliances," as Wheen calls them -- also cropped up earlier in his career.

This is not a book written for those who lived through Marxism and suffered its consequences. The issues raised by that false historical inevitability still have the quality of an open sore, not to mention the horrors of class war. "Marx's Das Kapital" is rather a smooth repackaging exercise born of an Anglo-Saxon world terrified of big ideas but keen to snap up a publishing opportunity. It remains the West talking to the West.

Lesley Chamberlain is the author of "Motherland: A Philosophical History of Russia" and "The Philosophy Steamer: Lenin and the Exile of the Intelligentsia."

Copyright © 2008 The Moscow Times. All rights reserved.
URL of this page: http://context.themoscowtimes.com/story/182615/