Monday, January 14, 2008

கம்யூனிஸ்டுகளை அறிந்து கொள்வோம்.

1. சித்தாந்தத்திற்குச் சொந்தக் காரர்கள் என்று தம்மைப் பற்றிப் பீற்றிக் கொள்வார்கள். ஆனால் நியாயமான வாதங்களை முன்வைத்தால், அல்பவாதி, அசடு என்று தூற்றுவார்களே தவிர பதில் சொல்ல் மாட்டார்கள்.

2. விஞ்ஞான சோஷலிசம் என்று பிதற்றுவார்கள். மாறிவரும் விஞ்ஞானப் பார்வையில் புதிய கோட்பாடுகளும் , புதிய கண்டுபிடிப்புகளும் வந்து எப்படி பழைய கம்யூனிச சித்தாந்தங்கள் பொய்த்துப் போயின என்று விளக்கிச் சொன்னால் அது பற்றி மூசு விடமாட்டாரகள்.

3. சொந்த நாட்டில் தோன்றிய மகாபுருஷர்களையும் , மகாத்மாக்களையும், சமூக சேவகர்களையும் தலவைர்களயும் ஏளனம் செய்வார்கள் . ஆனால் சீனாவின் தலைவரே என் தலைவர், பேராசான் மார்க்ஸ் , அஞ்சாநெஞ்சன் ஸ்டாலின் என்று வரலாறு தெரியாமல் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவார்கள்.

4. தர்மபுரியில் மூன்று பேர் செத்தார்கள், குஜராத்தில் ஆயிரம் பேர் மரணம், தில்லியில் சீக்கியக் கலவரத்தில் 200 பேர் மரணம் என்று துக்கம் தரக் கூடிய நியாயம் கோரி நடக்க வேண்டிய போராட்டத்தை, திசை திருப்பி, இந்த அமைப்பில் நியாயம் கிடைக்காது என்று பிரச்சாரத்தில் இறங்கிவிடுவார்கள். இந்த துயர நிகழ்வுகள் தொடர்ந்த நிகழ்வல்ல, இந்த அமைப்பிலேயே இந்த துய்ரங்களுக்கு பரிகாரம் தேடவும், இந்த துயரங்கள் போல மீண்டும் நடக்காமல் இருக்க நாம் செய்யக்கூடியது பல இருக்கின்றன என்று பேசவே மாட்டார்கள். இந்த அமைப்பை அழித்து தங்கள்து எவரும் எதிர்த்து கேள்வி கேட்கமுடியாத அமைப்புக்கு ஆள் சேர்க்க, கேள்வி கேட்க உரிமையுள்ள அமைப்பை ஒழிக்க திட்டம் போடுவார்கள். ஆனால் ஸ்டாலினின் கீழ் , போல் போட்டின் கீழ் , மாவோவின் கீழ் நடந்த திட்டமிட்ட படுகொலைகளைப் பற்றி , தொடர்ந்து ஆட்சியாளர்களால் மக்கள் வேட்டையாடப் பட்டது பற்றி மூச்சு விட மாட்டார்கள்.

5. வாரிசு அரசியல் என்று கருணாநிதியையும், லாலு பிரசாதைட்யும் தூற்றுவார்கள். ஆனால் மாஓ தன் மனைவிக்கு அரசியலில் இடம் அளித்தது பற்றியோ, அதைத் கொடர்ந்து கலாசாரப் புரட்சி வெறியாட்டங்களைப் பற்றியோ எதுவும் பேச மாட்டார்கள். காஸ்ட்ரோ தன் தம்பிக்கு கியூபாவை தாரை வார்ப்பது பற்றியோ, கிம் இல் ஜாங் தன் மகனுக்கு வட கொரியாவைத் தாரை வார்த்தது பற்றியோ பேச மாட்டார்கள்.

6. ஜனநாயக மரபுகளைக் குழி தோண்டிப் புதைத்துவிட்டு , மக்கள் பிரதிநிதிகளை நாய்கள் பன்றிகள் என்று ஏசிவிட்டு , புதிய ஜனநாயகம், மக்கள் ஜனநாயகம் என்ற பெயரில் வேடமிட்டு நாடகமாடுவார்கள்.

7. வாழ்வாதாரம் பறிக்கப் படுகிறது என்று விவசாய மக்களைத் தூண்டிவிட்டு, தொழிற்சாலைகள் முயற்சிகளுக்கு முட்டுக் கட்டை போடுவிட்டு, அவர்கள் குலத்தொழிலை விட்டு விலகி படித்து வேறு வேலை தேடிக் கொள்ளும் முயற்சியில் மண்ணை அள்ளிப் போடுவார்கள். ஆனால் இவர்கள் மட்டும் படித்து, பட்டம் பெற்று சொகுசாக இருப்பார்கள்.

கம்யூனிஸ்டுகள் பற்றிய உங்களது கருத்துக்களையும் எழுதுங்கள்.

1 comment:

Anonymous said...

நான் பழைய அனானி.
உங்களது பக்கத்தில் கருத்து எழுத முடியாததால் இங்கே எழுதுகிறேன்.

சம்பூகன் எழுதியதையும், ரயாகரன் எழுதியதையும் நான் படித்தேன். எந்த வாதமும், தர்க்கமும் இல்லாமல் மூச்சுக்கு மூச்சு பார்ப்பனர் என்று சொன்னால் போதும் என்பதற்கு மேல் எதுவும் இருப்பதாய் எனக்குப் படவில்லை. சம்பூகன் பட்டவர்த்தனமாய் ஆபாச விமர்சனத்தில் ஈடுபடிம்போது, ரயாகரன் அதே விஷயத்தைப் பூசி மெழுகினாற்போல சொல்கிறார். அவ்வளவு தான்.
பெரியார் தான் தேர்தலில் நிற்கவில்லையே தவிர தேர்தலில் நின்றவர்களுக்கு ஆதரவு அளித்தார், எனவே ஓட்டுப் பொறுக்கிகள் என்று கலைஞரையும், அண்ணாவையும், காமராஜரையும் திட்டுவதை ஒப்புக் கொள்கிறீர்களா என்ற கேள்விக்கு சம்பூகனிடமிருந்து பதில் இல்லை. சம்பூகன் திராவிடர் கழக முகமூடி அணிந்த கம்யூனிஸ்ட் என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை. சுப்பு, கணேஷ் போன்றவர்கள் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து காங்கிரசுக்குள் ஊடுருவியது போலத்தான் இது. சிலர் கம்யூனிஸ்டுகளின் உளவாளிகளாய்க் கூட மர்ற கட்சிகளில் இருந்தார்கள்.
ரசியா வந்தால் கூட பரவாயில்லை கம்யூனிசம் இங்கு வரவேண்டும் என்று பெரியார் சொன்னார் என்று கூறும் ரயாகரன் இது பெரியார் மீதான எப்படிப்பட்ட விமர்சனத்தை எழுப்பும் என்று கூட உணரவில்லை. ஹங்கேரி, செக்கோஸ்ல்கோவேக்கியா, கிழக்கு ஜெர்மனி போல ரஷ்யாவின் அடிமை நாடாக தமிழ்நாட்டை ஆக்க பெரியார் விரும்பியிருப்பாரா? பெரியாரை கம்யூனிஸ்ட் என்று அழைப்பது, கருணாநிதி காமராஜ் ஆட்சியை நான் தான் அமைத்தேன் என்று சொல்லிக் கொள்வது போலத்தான். காமராஜ் ஆட்சியை அமைத்துவிட்டேன் என்று சொல்பவர் காங்கிரசில் சேர்ந்து விட்டாரா என்ன? இல்லையே. அதுபோல் தான் பெரியாரும். ஜீவானந்தம் பெரியார் மீது கொள்கை விமர்சனங்கள் வைத்து கம்யூனிஸ்டுக் கட்சியில் சேர்ந்த போது, ஆமாம் நான் கம்யூனிஸ்ட் தான் என்று தி கவைக் கலைத்து விட்டு கம்யூனிஸ்ட் கட்சியில் சேரவில்லையே அவர்.
கம்யூனிஸ்டு கோட்பாடுகளையும், கம்யூனிஸ்ட் செயல்முறைகளையும் எதிர்த்தால், கம்யூனிஸ்டுகள் லட்சக் கணக்கில் முஸ்லீம்களை ஆ·கானிஸ்தானத்தில் கொன்றதைக் கோடிட்டுக் காட்டினால், அது பார்ப்பன அடிவருடித் தனம். ஸ்டாலின், மாஒ கொலைகளைப் பூசி மெழுகினால் அது முற்போக்கு . அமெரிக்கா ஈராக் மீது போர்தொடுத்தால் அது ஆக்கிரமிப்பு, ரஷ்யா ஆ·ப்கானிஸ்தானின் மீது படையெடுத்தால், திபெத்தை சீனா ஆக்கிரமித்தால் அது புரட்சி. என்னய்யா இது?
பழைய அனானி